செய்திகள்

மக்களவையின் முதல் பெண் செயலாளர் ஆகிறார் சினேஹ்லதா ஸ்ரீவஸ்தவா

Published On 2017-11-29 11:53 GMT   |   Update On 2017-11-29 11:53 GMT
பாராளுமன்ற மக்களவையின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சினேஹ்லதா ஸ்ரீவஸ்தவா, முதல் பெண் மக்களவை செயலாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
புதுடெல்லி:

பாராளுமன்ற மக்களவையின் செயலாளராக இருந்த அனுப் மிஸ்ரா திடீரென மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக சட்டத்துறை செயலாளராக இருந்த சினேஹ்லதா ஸ்ரீவஸ்தவா நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய பிரதேச மாநில பிரிவு ஐ.ஏ.எஸ் அதிகாரியான சினேஹ்லதா நிதித்துறையிலும் கூடுதல் செயலாளர் பொறுப்பை வகித்துள்ளார்.

முதன் முறையாக பெண் அதிகாரி ஒருவர் மக்களவையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வரும் டிசம்பர் 15-ம் தேதி குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில் அவர் 1-ம் தேதி முதல் புதிய செயலாளர் பொறுப்பை ஏற்க உள்ளார்.

2018-ம் ஆண்டு நவம்பர் இறுதி வரை இந்த பொறுப்பில் அவர் தொடருவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை செயலாளராக ரமா தேவி என்ற பெண் அதிகாரி பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News