செய்திகள்

அரசியல் சாசன தினம்: முகப்புரையை தினமும் வாசிக்க பல்கலை.களுக்கு யு.ஜி.சி கோரிக்கை

Published On 2017-11-26 05:27 GMT   |   Update On 2017-11-26 05:27 GMT
இந்திய அரசியல் சாசன தினத்தை ஒட்டி அனைத்து பல்கலைக்கழகங்களும் அரசியல் சாசன முகப்புரையை தினமும் காலையில் வாசிக்க ஏற்பாடு செய்யவேண்டும் என யு.ஜி.சி கோரிக்கை விடுத்துள்ளது.
புதுடெல்லி:

பிரிட்டன் ஆதிக்கத்தில் இருந்து விடுதலை அடைந்ததும் இந்தியாவுக்கென தனி அரசியல் சாசனம் வேண்டும் என கருதி சட்டமேதை அம்பேத்கர் தலைமையில் அரசியல் சாசன வரைவுக்குழு அமைக்கப்பட்டது. 1950-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி அரசியல் சாசன வரைவுக்குழு வடிவமைத்த சட்ட திட்டங்கள், இந்திய அரசியல் சாசனமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.


           அம்பேத்கர் தலைமையிலான அரசியல் சாசன வரைவுக்குழு

இந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் அரசியல் சாசன தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் தினமும் காலை பிராத்தனை கூட்டத்தில் அரசியல் சாசன முகப்புரையை வாசிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

அரசியல் சாசன முகப்புரையில் உள்ள குடிமகனின் அடிப்படை கடமைகளையும் தினமும் வாசிக்க வேண்டும் எனவும், அடிப்படை கடமைகளின் அவசித்தை வகுப்புகள் மூலம் மாணவர்களுக்கு விளக்க வேண்டும் எனவும் யு.ஜி.சி கேட்டுக்கொண்டுள்ளது.
Tags:    

Similar News