செய்திகள்
சபரிமலை சன்னிதானத்தில் குவிந்த அய்யப்ப பக்தர்கள் கூட்டம்.

சபரிமலையில் அலைமோதும் கூட்டம் - பிரசாதம் வழங்க கூடுதல் கவுண்டர்கள் திறப்பு

Published On 2017-11-23 10:16 GMT   |   Update On 2017-11-23 10:18 GMT
சபரிமலை கோவிலில் மண்டல பூஜையையொட்டி கூட்டம் அதிகரித்துள்ளதால், பக்தர்களின் சிரமத்தை போக்கும் வகையில் கூடுதலாக பிரசாத கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:

சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜையையொட்டி அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. இதனால் சுமார் 6 மணி நேரம் வரை பக்தர்கள் வரிசையில் காத்திருந்த பிறகே சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்ய முடிகிறது.

சபரிமலை செல்லும் பக்தர்கள் அரவணை மற்றும் அப்பத்தை பிரசாதமாக பெற்றுச்செல்வார்கள். பிரசாதம் வாங்கவும் பக்தர்கள் நீண்ட நேரம் காத்து இருக்க வேண்டியுள்ளது. பக்தர்கள் சிரமத்தை போக்கும் வகையில் தற்போது கூடுதலாக பிரசாத கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளது.

18-ம் படி அருகிலும் மாளிகை புரத்தம்மன் கோவில் அருகிலும் இந்த கூடுதல் கவுண்டர்கள் நேற்று முதல் செயல்பட தொடங்கி உள்ளது.

இங்கு ரூ.400 செலுத்தினால் 4 அரவணை டின் மற்றும் 2 பாக்கெட் அப்பமும் பக்தர்களுக்கு வழங்கப்படும். ரூ.600 செலுத்தினால் 6 டின் அரவணை, 4 பாக்கெட் அப்பமும் வழங்கப்படும் ரூ.40 செலுத்தி சுவாமி அய்யப்பனின் பிரசாதம் மட்டும் பெற்றுக் கொள்ளலாம்.



Tags:    

Similar News