செய்திகள்

மாடலிங் ஆக்குவதாக ஏமாற்றி இளம் பெண்ணை கற்பழித்த ராணுவ அதிகாரி கைது

Published On 2017-11-23 09:57 GMT   |   Update On 2017-11-23 09:57 GMT
மாடலிங் ஆக்குவதாக கூறி ஏமாற்றி இளம்பெண்ணை கற்பழித்த ராணுவ அதிகாரியை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிம்லா:

இமாச்சலப்பிரதேச மாநிலம் சிம்லாவில் ராணுவ அதிகாரிகள் குடியிருப்பு உள்ளது.

இங்கு வசிக்கும் ராணுவ அதிகாரியின் 21 வயது மகள் சிம்லா போலீஸ் சூப்பிரண்டு சவுமியா சாம்பசிவனை சந்தித்து ராணுவத்தில் லெப்டினன்ட் கர்ணலாக பணிபுரியும் அதிகாரி மீது கற்பழிப்பு புகார் கொடுத்துள்ளார்.

தனது தந்தையின் நண்பரான ராணுவத்தில் லெப்டினன்ட் கர்ணலாக பதவி வகிப்பவர், அங்குள்ள திரையரங்கில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க என்னையும், எனது தந்தையையும் அழைத்தார்.

நிகழ்ச்சி முடிந்ததும் விருந்துக்கு ஏற்பாடு செய்தார். அங்கு வைத்து அவர் தனது மகள் மும்பையில் மாடலிங் துறையில் இருப்பதாகவும் நீ சென்றால் உன்னையும் மாடலிங்காக மாறிவிடுவாய் என்றும் ஆசை காட்டினார்.

மறுநாள் எனது போட்டோவை வாட்ஸ்அப்பில் மகளுக்கு அனுப்பச் சொன்னார். அதன்படி நான் மும்பையில் உள்ள அவரது மகளுக்கு அனுப்பினேன். அதன்பிறகு மாடலிங்கில் சேர்த்து விடுவதாக கூறி என்னை தன்னுடன் மும்பைக்கு வருமாறு அழைத்துச் சென்றார்.

அங்கு சென்றதும் அவர் என்னை ஒரு அறையில் தங்க வைத்தார். குளிர்பானத்தில் மதுவை கலந்து என்னை கட்டாயப்படுத்தி குடிக்க வைத்தார். அப்போது என்னை கற்பழித்தார். இதற்கு அவரது நண்பர்களும் உதவி செய்தனர்.

இதை வெளியில் சொன்னால் எனது தந்தையின் பதவி உயர்வை தடுத்து விடுவேன் என்று மிரட்டினார்.

இவ்வாறு புகாரில் கூறி இருந்தார்.

இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி லெப்டினன்ட் கர்ணலை கைது செய்தனர். அவர் மீது இளம்பெண்ணை ஏமாற்றி கற்பழித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. முன்னதாக இளம்பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது. இதில் கற்பழிப்பு உறுதியானதும் நடவடிக்கை பாய்ந்தது.
Tags:    

Similar News