செய்திகள்

அமைதிக்கான இந்திரா காந்தி விருதுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தேர்வு

Published On 2017-11-18 17:52 GMT   |   Update On 2017-11-18 17:52 GMT
இந்தியாவால் வழங்கப்பட்டு வரும் இந்திரா காந்தி அமைதி விருதுக்கு இந்த ஆண்டு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
புதுடெல்லி:

இந்தியாவால் வழங்கப்பட்டு வரும் இந்திரா காந்தி அமைதி விருதுக்கு இந்த ஆண்டு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திரா காந்தி அமைதி விருது இந்தியாவால் ஆண்டுதோறும் தனிநபர் அல்லது நிறுவனங்களுக்கு பன்னாட்டு அமைதி, வளர்ச்சி மற்றும் புதிய பொருளியல் அமைப்பு, அறிவியல் கண்டுபிடிப்புகள் மக்கள் நலனுக்கு பயன்படுத்துதல் மற்றும் தனிநபர் சுதந்திரத்தை விரிவுபடுத்தல் போன்றவற்றிற்கு அவர்களது பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக வழங்கப்பட்டு வருகின்றது.
 
இந்திய ரூபாய்கள் ஒரு கோடி ரொக்கத் தொகையும் பாராட்டு சான்றிதழும் பரிசாக கொடுக்கப்படுகிறது. 2016 ஆம் ஆண்டுவரை 30 நபர்கள் இந்தப் பரிசினைப் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான இந்திரா காந்தி அமைதி விருதுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என தேர்வு குழுவினர் இன்று அறிவித்துள்ளனர்.

இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை சார்பில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தலைமையிலான தேர்வு குழுவினர் மன்மோகன் சிங்கை தேர்வு செய்துள்ளனர். இந்த விருது 1986-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. ஜெர்மனி சேலஞ்சர் அஞ்சலா மெர்கல், அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர் உள்ளிட்ட பலருக்கு இந்திரா காந்தி அமைதி விருது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News