செய்திகள்

திருமணம், திருவிழாக்களில் பட்டாசு வெடிக்க தடை: லக்னோ கலெக்டர் உத்தரவு

Published On 2017-11-16 17:30 GMT   |   Update On 2017-11-16 17:30 GMT
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் லக்னோவில் திருமணம் மற்றும் திருவிழாக்களில் பட்டாசு வெடிக்க தடை விதித்து மாவட்ட கலெக்டர் கவுசல்ராஜ் சர்மா உத்தரவிட்டுள்ளார்.
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் லக்னோவில் திருமணம் மற்றும் திருவிழாக்களில் பட்டாசு வெடிக்க தடை விதித்து மாவட்ட கலெக்டர் கவுசல்ராஜ் சர்மா உத்தரவிட்டுள்ளார்.

டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் தற்போது பனிமூட்டம் காணப்படுகிறது. காற்று மாசுபாடு காரணமாக புகை மூட்டமும் காணப்படுகிறது. சாலைகளில் முன்னால் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனி மற்றும் புகைமூட்டம் இருப்பதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. கடும் குளிரும் வாட்டி வருகிறது. இதனால் பொதுமக்கள் பழைய பொருட்களை தீயிட்டு நெருப்பில் குளிர் காய்ந்து வருகின்றனர்.



இந்நிலையில், லக்னோவில் திருமணம் மற்றும் திருவிழா காலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் கவுசல்ராஜ் சர்மா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்தினர் கூறுகையில், பனி மற்றும் புகை மூட்டத்தை குறைக்கும் வகையில் இன்று முதல் பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்படுகிறது. இந்த தடை அடுத்த ஆண்டு ஜனவரி 15-ம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News