search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "weddings"

    • வெளிநாடுகளில் இல்லாமல் நாட்டுக்குள்ளே இந்தியர்கள் திருமண கொண்டாட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.
    • திருமணத்திற்காக பொருட்கள் வாங்கும் போது, இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

    பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மனதின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்சி மூலம் அகில இந்திய வானொலியில் நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.

    107-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் இன்று பிரதமர் மோடி பேசியதாவது:-

    இந்தியர்கள சிலர் தங்களது திருமணங்களை வெளிநாடுகளில் வைக்கின்றனர். இது தேவைதானா ? நமது நாட்டிலேயே திருமணத்தை வைத்துக் கொண்டால், இந்தியாவின் பணம் வெளியே எங்கும் செல்லாமல் நாட்டுக்குள்ளேயே இருக்கும். பொருளாதாரத்தை மேம்படுத்த அது உதவியாக இருக்கும்.

    வெளிநாடுகளில் இல்லாமல் நாட்டுக்குள்ளே இந்தியர்கள் திருமண கொண்டாட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.

    அதேபோல், திருமணத்திற்காக பொருட்கள் வாங்கும் போது, இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதனால் இந்திய சந்தை மதிப்பில் ரூ.5 லட்சம் கோடி வர்த்தகம் நடைபெறும் என வணிக அமைப்புகள் கணித்துள்ளன

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • அழகிற்கு அழகு சேர்ப்பதில் சிகை அலங்காரமும் முக்கிய பங்கு வகிக்கிறது.
    • கொண்டை அலங்காரங்களுக்கு இன்றும் மவுசு அதிகம்.

    ஆடை அணிகலன்களோடு பெண்களின் அழகிற்கு அழகு சேர்ப்பதில் சிகை அலங்காரமும் முக்கிய பங்கு வகிக்கிறது. எத்தனையோ வகையான சிகை அலங்காரங்கள் இருந்த போதும் சில தலைமுறைகளுக்கு முன்னாள் பிரபலமாக இருந்த கொண்டை அலங்காரங்களுக்கு இன்றும் மவுசு அதிகம்.

    நவீன இந்திய கொண்டை

    குட்டையான மற்றும் அடர்த்தியான முடி உள்ள பெண்களுக்கு இந்த வகையான கொண்டை பொருத்தமாக இருக்கும். பண்டிகைகள் மற்றும் பொதுவான நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது அலங்கரித்துக்கொள்ள இது சரியான தேர்வாகும். கவுன்கள் மற்றும் முழங்கால் வரையிலான ஆடைகள் அணியும்போது இந்த வகையான சிகை அலங்காரம் கூடுதல் அழகு சேர்க்கும். ஓவல், வட்டம் மற்றும் வைரவடிவ முகத்தோற்றம் கொண்ட பெண்கள் நவீன இந்திய கொண்டை அலங்காரத்தை தேர்வு செய்யலாம்.

    பன் கொண்டை

    எல்லா வயது பெண்களுக்கும் பொருத்தக்கூடிய எளிமையான கொண்டை வகை இது. பார்ட்டிகளுக்கும், பயணங்களுக்கும், அலுவலக நிகழ்ச்சிகளுக்கும் இந்த வகை கொண்டை அலங்காரம் ஏற்றதாக இருக்கும். திருமண நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் போது பன் கொண்டையில் பூக்கம் மற்றும் அணிகலன்கள் கொண்டு அலங்கரித்தால் பார்ப்பவர்களின் கண்களைக் கவரும்.

    டாப் பன் கொண்டை

    டாப் பன் கொண்டை அலங்காரம் பார்ட்டிகள். திருமண வரவேற்புகள் மற்றும் மேற்கத்திய பின்னணி கொண்ட நிகழ்வுகளில் கலந்துகொள்ளும்போது அலங்கரித்துக்கொள்ள சரியான தேர்வாகும். நீளமான முடி கொண்ட பெண்களுக்கு இந்த வகை கொண்டை அழகுக்கு அழகு சேர்க்கும்.

    ஆஃப் பன் கொண்டை

    ஆஃப் பன் கொண்டை எனப்படும் இந்த கொண்டை இன்றைய இளம் பெண்களிடம் பிரபலமாக உள்ளது. விருந்துகளில் கலந்து கொள்பவர்களுக்கும், பயணம் செய்பவர்களுக்கும் இது சிறந்த தேர்வாகும். குட்டையான அல்லது நடுத்தரமான நீளம் கொண்ட கூந்தல் உள்ள பெண்களுக்கு இந்த வகை கொண்டை மிகவும் பொருத்தமாக இருக்கும்.

    சைடு பன் கொண்டை

    பக்கவாட்டு கொண்டை எனப்படும் இந்த கொண்டை அலங்காரம் நேர்த்தியான மற்றும் அழகான தோற்றம் அளிக்கும். இந்த வகை சிகை அலங்காரம் விருந்துகள், திருமணங்கள், குடும்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது அலங்கரித்துக்கொள்ள ஏற்றது.

    லோ பன் கொண்டை

    கனமான அலங்கார பொருட்கள் இல்லாமல் எளிமையாக செய்யப்படும் இந்த வகை கொண்டை அலங்காரம் திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் அல்லது சாதாரண பண்டிகை நாட்களில் கலந்துகொள்வதற்கு ஏற்றது.

    மெஸ்ஸி டாப் பன் கொண்டை

    நேரமில்லாமல் அவசரமாக கிளம்பக்கூடிய நிகழ்வுகளுக்கு ஏற்ற கொண்டை அலங்காரம் இது. சில நொடிகளில் செய்யக் கூடிய இந்த வகை சிகை அலங்காரம் எளிமையாக இருந்தாலும் உங்களுக்கு வசீகரமான தோற்றத்தை கொடுக்க கூடியது.

    • சேலம் மாவட்டம் ஆத்தூர் கோட்டை காய நிர்மலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான திருமணங்கள் நடைபெறு வது வழக்கம். இன்று ஒரு நாளில் மட்டும் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து 18 திருமணங்கள் நடை பெற்றன.
    • ஒரே நாளில் 18 திருமணங்கள் நடைபெற்றதால் வாகனத்திலும் குவிந்த வண்ணம் இருந்தனர்.

    ஆத்தூர்:

    திருமணங்கள் சொர்க்கத் தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அந்த திருமணங்கள் தெய்வத்தின் சாட்சியாக கோவிலில் நடைபெறுவது வழக்கம். தமிழகம் முழுவதும் புரட்டாசி முடிந்து ஐப்பசி மாதம் தொடங்கியதும் முதல் திருமண முகூர்த்த நாளான இன்று பல கோவில்களில் திருமணங்கள் நடைபெற்றன.

    சேலம் மாவட்டம் ஆத்தூர் கோட்டை காய நிர்மலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான திருமணங்கள் நடைபெறு வது வழக்கம். இன்று ஒரு நாளில் மட்டும் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து 18 திருமணங்கள் நடை பெற்றன.

    அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் மண மகன்-மணமகள் கழுத்தில் மங்கள நாண் அணிவிக்க ஆர்வத்துடன் மணமக்களும், அவர்களது பெற்றோர்களும் வந்திருந்தனர். மேலும் உற்றார் உறவினர்கள், நண்பர்கள், குடும்பத்தார் உட்பட அனை வரும் திரளாக கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

    இதனால் கோவில் வளாகம் முழுவதும் திருவிழா கோலமாக காட்சி அளித்தது. கோவிலின் திரும்பிய திசை எங்கும் மணமக்கள் நிறைந்து காணப்பட்டனர். செண்டை மேளம், கெட்டி மேளம் உள்ளிட்ட மங்கல ஓசைகள் கோயில் வளாகத்தில் அதிரடியாக ஒலித்தன.

    பின்னர் மணமக்கள் திருமண விழாவை முடித்து கோவிலில் சாமி தரிசனம் செய்து தங்கள் இல்லங்களுக்கு சென்றனர். ஒரே நாளில் 18 திருமணங்கள் நடைபெற்றதால் வாகனத்திலும் குவிந்த வண்ணம் இருந்தனர்.

    ×