செய்திகள்

லாரி-கார் விபத்தில் உயிர் தப்பிய பா.ஜ.க., எம்.பி.: கொலை முயற்சி என குற்றச்சாட்டு

Published On 2017-11-14 08:37 GMT   |   Update On 2017-11-14 08:37 GMT
பால் லாரியை மோதி தன்னை இன்று கொல்ல முயன்றதாக உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. சாக்‌ஷி மகராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.
லக்னோ:

பா.ஜ.க.வை சேர்ந்த சாக்‌ஷி மகராஜ் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள உன்னாவ் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.

இட்டா மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலை வழியாக இன்று காலை சாக்‌ஷி மகராஜ் தனது காரில் உடெட்பூர் ஆசிரமத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது ஷிக்கோபாத் பகுதியில் இருந்து எதிர் திசையில் வேகமாக வந்த ஒரு பால் டேங்கர் லாரி சாக்‌ஷி மகராஜ் காரின் மீது பயங்கரமாக மோதியது. காருடன் மோதிய பின்னர் மேலும் இரு இருசக்கர வாகனங்களை மோதி தள்ளிய லாரியின் டிரைவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருக்ன்றனர்.

இந்த விபத்தில் அவரது காரின் ஒரு பகுதி சேதம் அடைந்தாலும், சாக்‌ஷி மகராஜ் காயங்கள் ஏதுமின்றி உயிர் தப்பினார். குடி போதையில் இருந்த லாரியின் டிரைவர் தன்னை கொல்லும் நோக்கத்தில் இந்த விபத்தை ஏற்படுத்தியதாக சாக்‌ஷி மகராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.

Tags:    

Similar News