செய்திகள்

டெல்லியில் இன்றும் கடும் பனி மூட்டம்: 69 ரெயில்கள் தாமதம் - 8 ரெயில்கள் ரத்து

Published On 2017-11-13 05:12 GMT   |   Update On 2017-11-13 05:12 GMT
டெல்லியில் நிலவும் கடும் பனி மூட்டம் காரணமாக, இன்று 69 ரெயில்களின் சேவை தாமதம் ஆனது. 8 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.
புதுடெல்லி:

புதுடெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் தற்போது கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. காலை வேளைகளில் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விமானம் மற்றும் ரெயில் சேவையில் பாதிப்பு நிலவியது. டெல்லியில் சனிக்கிழமை நிலவிய கடும் பனி மற்றும்  புகை மூட்டம் காரணமாக 64 ரெயில்கள் தாமதமாக சென்றன. 14 ரெயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டது. நேற்று 34 ரெயில்கள் தாமதமாக சென்றன. 8 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில், இன்றும்  கடும் பனி மூட்டம் நிலவியது. அருகில் செல்லும் வாகனங்கள்கூட தெரியாத அளவுக்கு சாலைகளில் பனிமூட்டம் சூழ்ந்திருந்தது. காலை 8.30 மணிக்கு 400 மீட்டர் தூரம் வரை பார்வை தெரியாத நிலையில் பனி மூட்டம் இருந்தது.  இதனால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடியே வாகனங்களை மெதுவாக ஓட்டினர்.

டெல்லியில் நிலவும் கடுமையான பனி மூட்டத்தால் ரெயில் சேவை பெரிதும் பாதிக்கப்பட்டது. இன்று 69 ரெயில்கள் தாமதமாக சென்றன. டெல்லி-வாரணாசி மகனாமா எக்ஸ்பிரஸ், டெல்லி- ஆசம்கர் காய்பியத் எக்ஸ்பிரஸ், ஆனந்த் விகார்- மாவு எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட  8 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. 22 ரெயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.  ஆனால் விமான சேவையில் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.
Tags:    

Similar News