செய்திகள்

பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை: குஜராத் தேர்தலில் சிவசேனா தனித்து போட்டி

Published On 2017-11-10 07:09 GMT   |   Update On 2017-11-10 08:41 GMT
மத்திய அரசிலும், மராட்டியத்திலும், பா.ஜனதா கூட்டணி ஆட்சியில் இடம் பெற்றுள்ள சிவசேனா கட்சி குஜராத் தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது.

அகமதாபாத்:

குஜராத் மாநில சட்டசபை தேர்தல் டிசம்பர் மாதம் 2 கட்டங்களாக நடக்கிறது.

இந்த தேர்தலில் ஆளும் பா.ஜனதா- காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில் மத்திய அரசிலும், மராட்டியத்திலும், பா.ஜனதா கூட்டணி ஆட்சியில் இடம் பெற்றுள்ள சிவசேனா கட்சி குஜராத் தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது.

பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லாமல் குஜராத் தேர்தலில் தனித்து போட்டியிடுவது என்று சிவசேனாவின் தேசிய செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டது.


இது குறித்து சிவசேனாவின் மூத்த தலைவரும், மேல்-சபை எம்.பி.யுமான அனில் தேசாய் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்துத்துவா கொள்கைகளை முன்னிறுத்தி குஜராத் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ளோம். மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் 75 இடங்களுக்கு வேட்பாளரை நிறுத்த திட்டமிட்டுள்ளோம்.

பா.ஜனதா உள்பட எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்க வேண்டிய அவசியம் சிவசேனாவுக்கு இல்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News