செய்திகள்

சி.பி.ஐ சிறப்பு இயக்குநர் நியமனத்திற்கு எதிராக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு ஏற்பு

Published On 2017-11-09 08:39 GMT   |   Update On 2017-11-09 08:40 GMT
சி.பி.ஐ சிறப்பு இயக்குநராக ராகேஷ் அஸ்தனா நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் வரும் 13-ம் தேதி விசாரணைக்கு உள்ளது.
புதுடெல்லி:

சி.பி.ஐ சிறப்பு இயக்குநராக ராகேஷ் அஸ்தனா நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் வரும் 13-ம் தேதி விசாரணைக்கு உள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சி.பி.ஐ உள்ளிட்ட முக்கிய துறைகளின் தலைமை அதிகாரிகளை மாற்றம் செய்து கடந்த மாதம் 23-ம் தேதி மத்திய பணியாளர் நலத்துறை உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, சி.பி.ஐ சிறப்பு இயக்குநராக ராகேஷ் அஸ்தானா நியமிக்கப்பட்டிருந்தார்.

அஸ்தானாவின் நியமனம் முறைகேடானது எனவும், விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படவில்லை என குறிப்பிட்டு வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். சி.பி.ஐ.யின் இரண்டாவது உயரதிகாரி ஒருவரின் நியமனம் முறைகேடான வகையில் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, நவம்பர் 13-ம் தேதி முதல் விசாரணை தொடங்கும் என தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News