செய்திகள்

ஹெல்மட் அணியுமாறு பைக்கில் சென்ற பெண்ணுக்கு அட்வைஸ் செய்த சச்சின்

Published On 2017-11-03 15:50 GMT   |   Update On 2017-11-03 15:51 GMT
கேரளாவில் பைக்கில் பின்னால் உட்காந்து சென்ற பெண்ணிடம் ஹெல்மட் அணியுமாறு சச்சின் டெண்டுல்கர் தனது காரில் இருந்து கொண்டு அட்வைஸ் செய்துள்ளார்.
திருவனந்தபுரம்:

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகள் வரும் 17-ம் தேதி கொச்சியில் தொடங்க உள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் உரிமையாளராக சச்சின் டெண்டுல்கர் இருந்து வரும் நிலையில், கேரளாவில் நேற்று முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து தொடக்க விழாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில், இன்று திருவனந்தபுரம் நகரில் பேட்டா - சாகா சாலையில் டெண்டுல்கர் காரில் செல்லும் போது ஒரு இளம்பெண் பைக்கில் பின்புறம் ஹெல்மட் அணியாமல் சென்றுள்ளார். உடனே, தனது காரில் இருந்து கொண்டே ஹெல்மட் அணியுமாறு அவர் கூறினார்.



இதனை வீடியோவாக தனது ட்விட்டர் பக்கத்திலும் அவர் பதிவிட்டு, ‘வண்டியின் முன்னால் இருப்பவரோ, பின்னால் இருப்பவரோ இரண்டு உயிரும் முக்கியம்தான். தயவு செய்து ஹெல்மட் அணியும் வழக்கத்துக்கு வாருங்கள்’ என கருத்து தெரிவித்திருந்தார்.

மிக வைரலாக பரவிய இந்த வீடியோவில், பலர் சச்சின் கார் சீட் பெல்ட் அணியாமல் இருக்கிறார் என பதில் கேள்வி எழுப்பினர். (கேரளா போக்குவரத்து விதிகளின் படி காரில் உள்ள அனைவரும் சீட் பெல்ட் கட்டாயம் அணிய வேண்டும்) இதனையடுத்து, இன்று சீட் பெல்ட் அணிந்தது போல ஒரு புகைப்படத்தை ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News