செய்திகள்

ரூ.5 ஆயிரம் கோடி முறைகேடு: குஜராத் தொழிலதிபர் அமலாக்கத்துறையால் கைது

Published On 2017-11-01 10:52 GMT   |   Update On 2017-11-01 10:52 GMT
தனியார் நிறுவனங்களுக்கு வங்கிக்கடன் பெற உதவி செய்து ஐயாயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் குஜராத்தை சேர்ந்த தொழிலதிபர் ககான் அமலாக்கத்துறை அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டார்.
புதுடெல்லி:

குஜராத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் ஆந்திரா வங்கியில் ஐந்தாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் வாங்கியிருந்தன. குறிப்பிட்ட காலத்திற்குள் கடன் தொகை மற்றும் வட்டியை மேற்படி நிறுவனங்கள் செலுத்தவில்லை. இது தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்தது.

ஆந்திரா வங்கியின் முன்னாள் இயக்குநர் அனுப் கார்க் உள்ளிட்ட 7 பேர் மீது பணமோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், கடன் பெற உதவி செய்த ககான் தவான் என்பவர் அமலாக்கத்துறையின் விசாரணை அதிகாரிகளால் இன்று புது டெல்லியில் கைது செய்யப்பட்டார்.

சட்டவிரோத பணப்பறிமாற்றம் மற்றும் ஹவாலா மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள ககான் தவானை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விசாரணைக்கு எடுக்க இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News