செய்திகள்

பணிநீக்கம் செய்யப்பட்ட திருநங்கைக்கு கருணை அடிப்படையில் மாற்றுப்பணி: ஐகோர்ட்டு கோரிக்கை

Published On 2017-10-31 09:18 GMT   |   Update On 2017-10-31 09:18 GMT
பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட கடற்படை மாலுமி கிரி என்பரை பணி நீக்கம் செய்துள்ள நிலையில், கருணை அடிப்படையில் அவருக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டு கேட்டுக்கொண்டுள்ளது.
புதுடெல்லி:

பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட கடற்படை மாலுமி கிரி என்பரை பணி நீக்கம் செய்துள்ள நிலையில், கருணை அடிப்படையில் அவருக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டு கேட்டுக்கொண்டுள்ளது.

கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய கடற்படையின் பொறியியல் பிரிவில் எம்.கே.கிரி என்பவர் இணைந்தார். தனது உடலில் பெண் போன்ற மாறுதல்கள் இயற்கையாக இருப்பதை உணர்ந்த அவர் சில மாதங்களுக்கு முன்னர் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதனையடுத்து, அவரை பணியிலிருந்து நீக்கி கடற்படை நடவடிக்கை எடுத்தது.

கடற்படையின் நடவடிக்கையை எதிர்த்து கிரி டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ”இது போன்ற வழக்கு முதன்முறையாக எதிர்கொள்கிறோம். கடற்படையில் ஒழுக்கமின்மை காரணமாக நீங்கள் அவரை தண்டிக்க முடியும்,ஆனால், அதே நேரத்தில் அவரை நீங்கள் ஏற்றுக்கொள்ளவும் முடியும்” என கூறினர்.

மேலும், “இந்த சூழலில் அவரது மனநிலை மற்றும் குடும்ப சூழலை பரிசீலிக்க வேண்டிய அவசியம் உள்ளது. கடற்படை தனது உத்தரவை திரும்ப பெறுவது குறித்து யோசிக்க வேண்டும். பாதிப்புக்கு உள்ளான திருநங்கைக்கு மாற்றுப்பணி வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம்” என்று நீதிபதிகள் கடற்படைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News