செய்திகள்

செல்போன் இணைப்பு போனாலும் பரவாயில்லை: ஆதாருடன் இணைக்க மாட்டேன் - மம்தா பிடிவாதம்

Published On 2017-10-25 11:37 GMT   |   Update On 2017-10-25 11:37 GMT
செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டாலும் எண்ணை ஆதாருடன் இணைக்க மாட்டேன் என மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி பிடிவாதமாக கூறியுள்ளார்.
புதுடெல்லி:

திரிமுணால் காங்கிரஸ் கட்சி கூட்டம்  மம்தா பானர்ஜி தலைமையில் இன்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். பிரதமர் மோடி அறிமுகப்படுத்திய பல திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மம்தா பானர்ஜி கூட்டத்தில் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசு மக்களின் உரிமை மற்றும் சுதந்திரத்தில் தலையிடுகிறது. இது தவறாகும். ஒருவரின் செல்போன் எண் ஆதாருடன் இணைக்கப்பட கூடாது. எனது செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டாலும் நான் இணைக்க மாட்டேன். நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது. அதற்கு எதிராக யாரும் குரல் எழுப்பவில்லை. ஆனால் எங்கள் கட்சியில் உள்ள அனைவரும் சிறைக்கு சென்றாலும் பரவாயில்லை. நாங்கள் இதற்கு எதிராக போராடுவோம்.



மேலும், பணமதிப்பிழப்பு நடவடிக்கை மிகப்பெரிய ஊழலாகும். இதுகுறித்து மன்மோகன் சிங் மற்றும் யாஷ்வந்த் சின்ஹா ஆகியோர் விமர்சனம் செய்கின்றனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிமுகப்படுத்தப்பட்ட நவம்பர் 8-ம் தேதி கருப்பு தினமாக எங்கள் கட்சியில் உள்ளவர்களால் அனுசரிக்கப்படுகிறது.



நாட்டை ஆளும் ஆசை எங்களுக்கு இல்லை. ஆனால் ஆட்சிப் பொறுப்பில் இருந்தால் பா.ஜ.க.வை மத்தியிலிருந்து கண்டிப்பாக வெளியேற்றுவோம் என மம்தா பானர்ஜி பேசினார்.

Tags:    

Similar News