செய்திகள்

முத்திரை தாள் மோசடி வழக்கில் கைதான அப்துல் கரீம் தெல்கி மருத்துவமனையில் அனுமதி

Published On 2017-10-23 20:21 GMT   |   Update On 2017-10-23 20:22 GMT
முத்திரை தாள் மோசடி தொடர்பான வழக்கில் கைதாகி பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து வரும் அப்துல் கரீம் தெல்கி, உயிருக்கு ஆபத்தான் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்ப்ட்டு உள்ளார்.
பெங்களூர்:

முத்திரை தாள் மோசடி தொடர்பான வழக்கில் கைதாகி பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து வரும் அப்துல் கரீம் தெல்கி, உயிருக்கு ஆபத்தான் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்ப்ட்டு உள்ளார்.

முத்திரை தாள் மோசடி தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டவர் அப்துல் கரீம் தெல்கி. இவருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, தெல்கி கடந்த 2001-ம் ஆண்டு முதல் பெங்களுர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து வருகிறார்.

இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன் அப்துல் கரீம் தெல்கி சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக சிறைத்துறை டிஐஜி ரூபா தெரிவித்து வீடியோ வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பெங்களூர் பரப்ப்பன அக்ரஹார சிறையில் இருந்து வரும் அப்துல் கரீம் தெல்கி, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அவரது வழக்கறிஞ்ர் நானையா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், கடந்த சில தினங்களாகவே தெல்கிக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. மூளை தண்டுவட நோயால் பாதிக்கப்பட்ட அவரது உடல்நிலை நேற்று இரவு மோசம் அடைந்தது. இதைத்தொடர்ந்து, அவர் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். ஐசியுவில் அனுமதிக்கப்பட்ட அவர் வெண்டிலெட்டர் மூலம் சுவாசித்து வருகிறார். தொடர்ந்து அவரை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர் என தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News