செய்திகள்

சுஷ்மா ஸ்வராஜ் இன்று வங்காளதேசம் பயணம்: ரோஹிங்கியா அகதிகள் குறித்து பேச்சுவார்த்தை

Published On 2017-10-22 05:26 GMT   |   Update On 2017-10-22 05:33 GMT
இரண்டு நாள் அரசுமுறை பயணமாக இன்று வங்காளதேசம் செல்லும் மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் ரோஹிங்கியா அகதிகள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
புதுடெல்லி:

மியான்மரில் ராணுவ அடக்குமுறையால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகளாக வங்காளதேசத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். இந்தியாவிலும் அகதிகளாக இருக்கும் ரோஹிங்கியாக்களை வெளியேற்றுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. ஆனால், சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் தற்போதைக்கு தனது நடவடிக்கையை நிறுத்தி வைத்துள்ளது.



கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் நடைபெற்ற ஐ.நா பொதுச்பை மாநாட்டில் கலந்து கொண்ட வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா, சுஷ்மா ஸ்வராஜ்-ஐ சந்தித்து இவ்விவகாரம் தொடர்பாக பேசியிருந்தார். இந்நிலையில், அரசுமுறை பயணமாக இன்று வங்காள தேசம் செல்லும் சுஷ்மாவின் பயணத்திட்டத்தில் ரோஹிங்கியா பிரச்சனை முக்கிய இடத்தில் உள்ளது.

இரண்டு நாட்கள் அங்கு இருக்கும் சுஷ்மா வணிகம், பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட சில விவாகரங்கள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
Tags:    

Similar News