செய்திகள்

சிறையில் உள்ள சகோதரர்களின் நெற்றியில் திலகமிட வரிசையில் காத்திருந்த சகோதரிகள்

Published On 2017-10-21 10:06 GMT   |   Update On 2017-10-21 10:06 GMT
வடமாநிலங்களில் சகோதர-சகோதரிகளின் உறவை பலப்படுத்தும் விதமாக கொண்டாடப்படும் பாய் தூஜ் பண்டிகையை ஒட்டி சிறையில் உள்ள சகோதரர்களின் நெற்றியில் திலகமிட பெண்கள் காத்திருந்தனர்.
லக்னோ:

வடமாநிலங்களில் பாய் தூஜ் என்ற பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையானது சகோதரர் மற்றும் சகோதரிகளுக்கு இடையேயான உறவை பலப்படுத்தும் விதமாக கொண்டாடப்படுகிறது. சகோதரிகள் தங்கள் சகோதரர்களுக்கு ஏழு வண்ணங்களில் திலகமிடுவர். பின்னர் சகோதரிகளுக்கு சகோதரர்கள் பரிசுகள் வழங்கி மகிழ்வர்.



இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் பாய் தூஜ் பண்டிகை கொண்டாடப்பட்டது. அப்பண்டிகையை ஒட்டி மாவட்டத்தில் உள்ள சிறைச்சாலையில் உள்ள குற்றவாளிகளை காண்பதற்கு பல பெண்கள் வரிசையில் காத்திருந்தனர். அவர்கள் சிறையில் உள்ள தங்கள் சகோதரர்களை காண்பதற்காக காத்திருப்பதாக தெரிந்தது.



சிறையில் இருந்தாலும் தனது சகோதரர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக சகோதரிகள் சென்றிருப்பது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News