செய்திகள்

காஷ்மீர் எல்லையில் மீண்டும் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல்: சுமை தூக்கும் தொழிலாளி காயம்

Published On 2017-10-21 08:47 GMT   |   Update On 2017-10-21 08:49 GMT
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் வடக்கில் உள்ள பாரமுல்லா மாவட்டத்தில் இன்று பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் ஒரு சுமைதூக்கும் தொழிலாளி காயமடைந்தார்.




ஸ்ரீநகர்:

பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் உள்ள இந்திய நிலைகள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பாரமுல்லா மாவட்டத்திற்குட்பட்ட கமல்கோட் பகுதியில் உள்ள இந்திய ராணுவ நிலைகள் மீது இன்று காலை 11 மணியளவில் பாகிஸ்தான் படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். 

சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த துப்பாக்கிச் சண்டையில் அப்பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த சுமைதூக்கும் பணியாளர் ஒருவர் காயமடைந்தார். இதையடுத்து பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags:    

Similar News