செய்திகள்

டெல்லியில் திருடப்பட்ட முதல்வர் கெஜ்ரிவாலின் கார் கண்டுபிடிப்பு

Published On 2017-10-14 04:05 GMT   |   Update On 2017-10-14 04:05 GMT
தலைநகர் டெல்லியில் திருட்டு போன முதல்வர் கெஜ்ரிவாலின் கார் இன்று காசியாபாத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
புதுடெல்லி:

டெல்லி முதல்வராக உள்ள அரவிந்த் கெஜ்ரிவால், தேர்தல் பிரச்சாரத்தின் போது பயன்படுத்திய நீல நிற ‘வேகன் ஆர்’ காரானது நேற்று முன்தினம் தலைமைச் செயலகத்திற்கு வெளியே சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மதியம் அந்த கார் திடீரெனக் காணாமல் போனது. அதை யாரோ திருடிச் சென்றுவிட்டனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். காரை கண்டுபிடித்து கொடுப்போருக்கு வெகுமதி வழங்கப்படும் என ஆம் ஆத்மி கட்சியின் அரியானா ஒருங்கிணைப்பாளர் நவீன் ஜெய்ஹிந்த் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று அந்த கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காசியாபாத்தின் மோகன் நகரில் இருந்து கார் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் குந்தன் ஷர்மா என்பவர் இந்த காரை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பரிசாக அளித்தார். 2015 சட்டமன்றத் தேர்தல் வரை அந்த காரை கெஜ்ரிவால் பயன்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News