செய்திகள்

டெல்லியில் விவசாயிகள் 90-வது நாளாக போராட்டம்

Published On 2017-10-14 03:08 GMT   |   Update On 2017-10-14 03:08 GMT
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்லியில் நடந்து வரும் தமிழக விவசாயிகளின் போராட்டம் நேற்று 90-வது நாளை எட்டியது.
புதுடெல்லி:

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்லியில் நடந்து வரும் தமிழக விவசாயிகளின் போராட்டம் நேற்று 90-வது நாளை எட்டியது. தொடர்ந்து பல நாட்கள் போராட்டம் நடத்தியும் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என்றுகூறி வருத்தம் தெரிவித்த விவசாயிகள் அதை போராட்டத்தில் வெளிப்படுத்தினர்.

பிரதமர் மோடி வேடம் அணிந்த ஒருவர் நாற்காலியில் அமர்ந்திருக்க, அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் அவரது காலை வணங்கி மண்டியிட்டனர். இதேபோல் பன்னாட்டு நிறுவன உரிமையாளர் என்ற பெயர்ப்பலகையை கழுத்தில் தொங்கவிட்ட ஒருவர் உயரமான நாற்காலியில் அமர வைக்கப்பட்டிருந்தார்.

அதாவது, பிரதமர் மோடி பன்னாட்டு நிறுவனங்களை ஆதரித்து, விவசாயிகளை புறக்கணிப்பதை வெளிப்படுத்தும் வகையில் இந்த போராட்டம் அமைந்தது.

Tags:    

Similar News