செய்திகள்

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நீடிப்பு

Published On 2017-10-07 22:16 GMT   |   Update On 2017-10-07 22:16 GMT
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 84-வது நாளான நேற்று சவரம் செய்யும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர்.
புதுடெல்லி:

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தின் 84-வது நாளான நேற்று சவரம் செய்யும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர்.

விவசாயிகள் கடனுக்கு அடமானம் வைத்த நிலங்களை வங்கி அதிகாரிகள் ஜப்தி செய்து ஏல நடவடிக்கை எடுத்திருக்கும் நிலையில், அதை அரசு தடுக்காததால் விவசாயிகள் சவர தொழிலுக்கு மாறிவிட்டனர் என்பதை சித்தரிக்கும் வகையில் இந்த போராட்டம் நடத்தப்பட்டதாக விவசாயிகள் தரப்பில் கூறப்பட்டது. தமிழக விவசாயிகள் குழுமி இருக்கும் ஜந்தர் மந்தர் சாலையில் போராட்டம் நடத்த தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்து இருக்கிறது. எனினும் அங்கு தமிழக விவசாயிகள் மற்றும் வேறு சில மாநிலத் தினரின் போராட்டம் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News