செய்திகள்

இந்தியாவில் உள்ள ரோஹிங்யாக்களை மியான்மருக்கு அனுப்பக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு

Published On 2017-09-24 07:46 GMT   |   Update On 2017-09-24 07:46 GMT
இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள ரோஹிங்கியா இனத்தவர்களை மியான்மருக்கு திரும்பி அனுப்ப நடவடிக்கை வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் பா.ஜ.க வழக்கறிஞர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
புதுடெல்லி:

மியான்மர் நாட்டில் ராணுவத்தின் அடக்குமுறையால் லட்சக்கணக்கான ரோஹிங்யா முஸ்லிம்கள் அகதிகளாக வங்காளதேசம், இந்தியா போன்ற அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். இந்தியாவில் மட்டும் சுமார் 40 ஆயிரம் ரோஹிங்யாக்கள் சட்டவிரோதமாக குடியேறியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சட்டவிரோதமாக குடியேறியுள்ள ரோஹிங்யாக்களை மியான்மருக்கு திரும்பி அனுப்ப வேண்டும் என பா.ஜ.க வழக்கறிஞரான அஷ்வினி குமார் உபாத்யா சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே, இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மற்றும் எல்லை தாண்டி இந்தியாவுக்குள் வந்தவர்களை மத்திய, மாநில அரசுகள் கண்டறிந்து அவர்களை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடவேண்டும் என அஷ்வினி குமார் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த மனுவானது, வரும் அக்டோபர் 3-ம் தேதி நடைபெற உள்ள முந்தைய மனு விசாரணையின் போது சேர்த்து விசாரிக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags:    

Similar News