செய்திகள்

வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்கியா அகதிகளுக்கு 700 டன் உதவிப்பொருட்கள் அனுப்பியது இந்தியா

Published On 2017-09-23 14:56 GMT   |   Update On 2017-09-23 14:56 GMT
வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்கியா அகதிகளுக்கு 700 டன் உதவிப்பொருட்களை இந்திய அரசு கப்பல் மூலம் அனுப்பிவைத்துள்ளது.

புதுடெல்லி: 

மியான்மரில் ராக்கின் மாகாணத்தில் ரோகிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது. அதனால் ராணுவத்துக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. இதனால் பலர் உயிரிழந்தனர். வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டது.

இதனால் அகதிகளாக வெளியேறிய 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் அண்டை நாடான வங்காள தேசத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த மக்களுக்கு வங்கதேச அரசு உணவு, உடை உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகிறது. இருப்பினும் அதிக அளவிளான மக்கள் அகதிகளாக அங்கு இருப்பதனால் அனைவருக்கும் உதவிகள் வழங்குவதில் அந்நாட்டிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்கியா அகதிகளுக்கு நிவாரணப் பொருட்களை இந்தியா அனுப்பி உள்ளது. வங்கதேசத்துக்கு 700 டன் நிவாரணப் பொருட்களை இந்தியா கப்பலில் இந்தியா அனுப்பியது. 62,000 பேருக்கு உடை, கொசுவலை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
Tags:    

Similar News