செய்திகள்

துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு நீதிமன்றம் சொன்னால் மட்டுமே இழப்பீடு: அரியானா முதல் மந்திரி பேட்டி

Published On 2017-09-22 08:35 GMT   |   Update On 2017-09-22 08:35 GMT
தேரா சச்சா சவுதா தலைவர் கைது செய்யப்பட்டது தொடர்பாக நடைபெற்ற கலவரத்தின்போது, போலீசாரின் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு நீதிமன்றம் சொன்னால்தான் இழப்பீடு வழங்கப்படும் என அரியானா முதல் மந்திரி தெரிவித்துள்ளார்.
சண்டிகர்:

பாலியல் புகார் குறித்த வழக்கில் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என அரியானா நீதிமன்றம் கடந்த மாதம் அறிவித்தது. இதைதொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் கலவரத்தில் ஈடுபட்டனர். பொது சொத்துக்களுக்கு பலத்த சேதங்களை ஏற்படுத்தினர்.

இதையடுத்து. குர்மீத்தின் ஆதரவாளர்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் அரியானா போலீசார் ஈடுபட்டனர். அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் பலர் கொல்லப்பட்டனர். இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அரியானா முதல் மந்திரி மனோகர் லால் கட்டார் செய்தியாளர்களிடம் கூறுகையில், கலவரம் தொடர்பான வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது. போலீசார் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் முடிவு செய்தால், அதை மாநில அரசு ஏற்றுக்கொள்ளும். நீதிமன்றம் சொன்னால் அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News