செய்திகள்

திருநங்கைகளுக்கு மாத ஓய்வூதியம், வீடு மற்றும் வேலைவாய்ப்பு: ஆந்திர முதல்வர் அறிவிப்பு

Published On 2017-09-21 22:04 GMT   |   Update On 2017-09-21 22:04 GMT
திருநங்கைகளின் வாழ்கைத்தரத்தை மேம்படுத்தும் விதமாக அவர்களுக்கு மாத ஓய்வூதியம், வீடு ஆகிய நலத்திட்ட உதவிகளை ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
அமராவதி:

திருநங்கைகளின் வாழ்கைத்தரத்தை மேம்படுத்தும் விதமாக அவர்களுக்கு மாத ஓய்வூதியம், வீடு ஆகிய நலத்திட்ட உதவிகளை ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் இரண்டு நாள் மாவட்ட ஆட்சியர்கள் ஆலோசனைக்கூட்டம் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடந்தது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநிலத்தின் வளர்ச்சிக்கான முக்கிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

ஆலோசனைக்கூட்டம் இன்று நிறைவடைந்த நிலையில், திருநங்கைகளுக்கான முக்கிய திட்டங்களை சந்திரபாபு நாயுடு அறிவித்தார். மாதம் ரூ.1000 ஓய்வூதியம், திருநங்கைகளுக்கு வீடு, ரேஷன் கார்டு உள்ளிட்ட அனைத்து விதமான அடையாள அட்டை, வேலைவாய்ப்பை அளிக்கும் விதமான திட்டம் ஆகியவற்றை முதல்வர் அறிவித்துள்ளார்.

“திருநங்கைகள் தன்னிறைவாக இருக்கும் படியான வேலைவாய்ப்பை அளிக்க வேண்டியது அவசியம்” என்று அவர் கூட்டத்தில் பேசியுள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டில் திருநங்கைகளை மூன்றாவது பாலினமாக அங்கீகரிக்க உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு, அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை மற்றும் அனைத்து விதாமான சமூக நலத்திட்டகளை பெறும் உரிமை ஆகியவை அளிக்க அரசுக்கு உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News