செய்திகள்

திரிபுரா மாநிலத்தில் பத்திரிக்கையாளர் கடத்தி கொலை - ராகுல் காந்தி கண்டனம்

Published On 2017-09-21 19:44 GMT   |   Update On 2017-09-21 19:44 GMT
திரிபுரா மாநிலத்தில் சாந்தனு போவ்மிக் என்ற பத்திரிக்கையாளர் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் ஜனநாயகத்தின் மீது கவலையை ஏற்படுத்துவதாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

திரிபுரா மாநிலத்தில் சாந்தனு போவ்மிக் என்ற பத்திரிக்கையாளர் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் ஜனநாயகத்தின் மீது கவலையை ஏற்படுத்துவதாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் உள்ள உள்ளூர் ஊடகத்தில் பணியாற்றும் சாந்தனு போவ்மிக் என்பவர் கடத்தி கொலை செய்யப்பட்டார். அம்மாநிலத்தில் உள்ள ஐ.பி.எப்.டி என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்த கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டு வருகிறது.

இந்த கொலைக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக் அம்மாநில முதல்வர் மாணிக் சர்கார் கூறியுள்ளார். இந்நிலையில், பத்திரிக்கையாளர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவது ஜனநாயகத்தின் மீதான கவலையை அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் கர்நாடக மாநிலம் பெங்களூரில் பெண் பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News