செய்திகள்

டிராய்-யின் புதிய விதிமுறைக்கு எதிராக நீதிமன்றம் செல்ல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முடிவு

Published On 2017-09-20 18:44 GMT   |   Update On 2017-09-20 18:44 GMT
இரு நெட்வொர்க்-களுக்கு இடையே உள்ள இணைப்பு கட்டணம் குறைக்க டிராய் எடுத்துள்ள நடவடிக்கையால் இழப்பு ஏற்படும் என தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நீதிமன்றம் செல்ல முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதுடெல்லி:

இரு நெட்வொர்க்-களுக்கு இடையே உள்ள இணைப்பு கட்டணம் குறைக்க டிராய் எடுத்துள்ள நடவடிக்கையால் இழப்பு ஏற்படும் என தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நீதிமன்றம் செல்ல முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மொபைல் போனில் ஒரு நெட்வொர்க்கின் சிம்கார்டில் இருந்து மற்றொரு நெட்வொர்க்கின் சிம்கார்டுக்கு பேசும்போது, அந்த அழைப்பை இணைப்பதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இணைப்பு கட்டணம் செலுத்த வேண்டும். இதுவரை 14 காசுகளாக இருந்த இக்கட்டணம், 6 காசுகளாக குறைக்கப்பட்டுள்ளது.

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ‘டிராய்’ இதை அறிவித்துள்ளது. இந்த கட்டண குறைப்பு அடுத்த மாதம் 1-ந் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதியில் இருந்து இந்த இணைப்பு கட்டணம் முற்றிலுமாக நீக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிராய்-யின் புதிய அறிவிப்பால் மொபைல்போன் அழைப்பு கட்டணங்களும் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், டிராய்-யின் இந்த புதிய விதிமுறைகளால் நிதி இழப்பு ஏற்படும் என தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதனால், இந்த விதிமுறைகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் அந்நிறுவனங்கள் முறையிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Tags:    

Similar News