செய்திகள்

ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் சம்பளம் போனஸ்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Published On 2017-09-20 12:05 GMT   |   Update On 2017-09-20 12:05 GMT
ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் சம்பளம் உற்பத்தி சார்ந்த போனசாக வழங்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
புதுடெல்லி:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு 78 நாட்கள் உற்பத்தி சார்ந்த போனசாக வழங்கப்பட்டது. இந்த ஆண்டு ரெயில்வே ஊழியர்களுக்கான போனஸ் தொடர்பாக ரெயில்வே நிர்வாகம் செய்த பரிந்துரை மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

டெல்லியில் இன்று பிரதமர் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ரெயில்வே ஊழியர்களுக்கான போனஸ் குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர், 78 நாட்கள் சம்பளத்தை உற்பத்தி சார்ந்த போனசாக வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன்மூலம், 12.3 லட்சம் ரெயில்வே ஊழியர்கள் பயன்பெறுவார்கள்.

இதுகுறித்து நிதி மந்திரி அருண் ஜெட்லி நிருபர்களிடம் கூறுகையில், “அரசிதழ் பதிவு பெறாத, தகுதி உள்ள அனைத்து ரெயில்வே ஊழியர்களுக்கும் இந்த ஆண்டு 78 நாட்கள் சம்பளத்தை உற்பத்தி சார்ந்த போனசாக வழங்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது” என்றார்.
Tags:    

Similar News