search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய அமைச்சரவை ஒப்புதல்"

    • சர்வதேச சந்தையில் விலை உயர்வால், எண்ணெய் நிறுவனங்களுக்கு பாதிப்பு.
    • வீட்டு உபயோக சமையல் எரிவாயு விநியோகம் தடைபடாமல் உறுதி செய்ய நடவடிக்கை.

    கடந்த 2020 ஜுன் மாதத்திலிருந்து, 2022 ஜூன் மாதம் வரையிலான கால கட்டத்தில் சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை சுமார் 300 சதவீதம் அதிகரித்துள்ளது. இருப்பினும், இந்த அளவுக்கு இந்த விலை உயர்வு இந்திய வாடிக்கையாளர்களுக்கு உயர்த்தப்படவில்லை. இந்த காலத்தில் 72 சதவீதம் மட்டுமே விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், எண்ணெய் விற்பனை நிறுவனங்களுக்கு கணிசமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய இயற்கை எரிவாயுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதனையடுத்து பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்திய எண்ணெய்க் கழகம் (ஐஓசிஎல்), பாரத பெட்ரோலியக் கழகம் (பிபிசிஎல்), இந்துஸ்தான் பெட்ரோலியக் கழகம் (ஹெச்பிசிஎல்) ஆகியவற்றுக்கு

    ரூ.22,000 கோடி மானியம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கோரிக்கையை அடுத்து, இந்த ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழங்கி உள்ளது.

    வீட்டு உபயோக சமையல் எரிவாயு விநியோகம் தடைபடாமல் நடப்பதை உறுதி செய்வது மற்றும் தற்சார்பு இந்தியா திட்டத்திற்கான உறுதிப்பாட்டை தொடர்வது ஆகியவற்றிற்காக பொதுத்துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்களுக்கு உதவும் வகையில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    • 27-வது சர்வதேச அஞ்சல் சங்க மாநாட்டில் 11-வது கூடுதல் நடைமுறை கையெழுத்தானது.
    • சர்வதேச அஞ்சல் சங்க விதிகளில் இடம்பெற்றுள்ள விதிமுறைகளை அமல்படுத்த நடவடிக்கை.

    ஐவரி கோஸ்ட் நாட்டின் அபித்ஜான் நகரில் நடைபெற்ற சர்வதேச அஞ்சல் சங்கத்தின் 27-வது மாநாட்டில் சர்வதேச அஞ்சல் சங்கத்தின் சட்டவிதிகளின் 11-வது கூடுதல் நடைமுறை கையெழுத்தானது.

    இதன்படி சர்வதேச அஞ்சல் சங்கத்தின் விதிமுறைகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்திற்கு, பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    இந்த ஒப்புதல் மூலம் இந்திய அஞ்சல் துறை, குடியரசுத் தலைவரால் கையெழுத்திடப்பட்ட ஒப்புதல் ஆணை பெறுவதுடன், அதனை சர்வதேச அஞ்சல் சங்கத்தின் சர்வதேச அமைப்பின் தலைமை இயக்குனரிடம் ஒப்படைக்கும். இது சர்வதேச அஞ்சல் சங்க விதிகளில் இடம்பெற்றுள்ள விதிமுறை 25 மற்றும் 30 அமல்படுத்த உதவும் என்று மத்திய அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×