செய்திகள்

குஜராத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி: ஐக்கிய ஜனதாதளம் அறிவிப்பு

Published On 2017-09-19 10:31 GMT   |   Update On 2017-09-19 10:31 GMT
குஜராத் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளுடன் கூட்டணி என ஐக்கிய ஜனதாதளம் அறிவித்துள்ளது.
அகமதாபாத்:

குஜராத் மாநிலம் ஐக்கிய ஜனதாதளம் (சரத்யாதவ் பிரிவு) தலைவராக அந்த கட்சியின் எம்.எல்.ஏ. ஜவ்துபாய் வாசவா நியமிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் குஜராத் மாநில மேல்-சபை எம்.பி. தேர்தலில் சோனியா காந்தியின் அரசியல் செயலாளர் அகமது பட்டேல் போட்டியிட்ட போது அவருக்கு ஆதரவாக ஜவ்துபாய் வாசவா ஓட்டு போட்டார். இது தான் அகமது பட்டேல் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது.

கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டதையடுத்து ஜவ்துபாய் வாசவா கூறியதாவது:-

குஜராத்தில் உள்ள பெரும்பான்மை மாவட்ட ஐக்கிய ஜனதாதளம் தலைவர்கள் என்னை ஆதரித்ததால் நான் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறேன்.

வருகிற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளுடன் சேர்ந்து ஐக்கிய ஜனதாதளம் போட்டியிடும்.

மாநிலத்தில் போராட்டம் நடத்தி வரும் பட்டேல் சமூகத்தினருக்கு நாங்கள் ஆதரவாக இருப்போம்.

அதே போல் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் தலைவராக இருக்கும் அல்பேஸ் தாகூர் நடத்தும் போராட்டத்துக்கும் ஆதரவு அளிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News