செய்திகள்

கேரளா: பலத்த மழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

Published On 2017-09-17 18:46 GMT   |   Update On 2017-09-17 18:46 GMT
கேரளா மாநிலத்தில் பெய்துவரும் பலத்த மழையின் காரணமாக இன்று அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அம்மாநில அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக அம்மாநிலத்தின் முக்கிய சாலைகள் நீரில் மூழ்கியுள்ளன. கோட்டையம் - திருவனந்தபுரம் இடையேயான ரெயில் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் ரெயில் சேவை முற்றிலும் பாதிப்படைந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக கன்னூர் மாவட்டத்தின் தலிபரம்பாவில் 6 செ.மீ.யும், வயநாடு மாவட்டத்தின் வைத்திரியில் 5 செ.மீ. அளவிற்கும் மழை பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவனந்தபுரத்திலும் பலத்த காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.



இந்நிலையில், மழை மேலும் இரண்டு நாட்களுக்கு தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து அங்கு இயங்கிவரும் அனைத்து கல்விநிறுவனங்களுக்கும் அம்மாநில அரசு இன்று விடுமுறை அறிவித்துள்ளது. மேலும் இம்மழை பாதிப்புகளில் இருந்து தப்பிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

Tags:    

Similar News