செய்திகள்

விமானப்படை முன்னாள் தளபதி அர்ஜன் சிங் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் சென்று அஞ்சலி

Published On 2017-09-17 15:09 GMT   |   Update On 2017-09-17 15:09 GMT
மாரடைப்பால் காலமான விமானப்படை முன்னாள் தளபதி அர்ஜன் சிங் வீட்டுக்கு நேரில் சென்ற பிரதமர் மோடி, அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
புதுடெல்லி:

இந்திய விமானப்படையின் தளபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் அர்ஜன் சிங் (98). இவருக்கு நேற்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

இதைதொடர்ந்து, டெல்லியில் உள்ள கவுட்டில்யா மார்க் பகுதியில் உள்ள அர்ஜன் சிங் வீட்டுக்கு இன்று காலை அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. அவரது உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும், ராணுவ மந்திரி நிர்மலா சீத்தாராமன் மற்றும் முப்படைகளை சேர்ந்த மூத்த அதிகாரிகள் உள்பட பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.



இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பிய பிரதமர் நரேந்திர மோடி விமானப்படை முன்னாள் தளபதி அர்ஜன் சிங் வீட்டுக்கு சென்றார். அங்கு வைக்கப்பட்டிருந்த அர்ஜன் சிங் உடலுக்கு
மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதன்பின்னர், அவரது உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.
Tags:    

Similar News