செய்திகள்

கர்நாடக சட்டசபை தேர்தல்: தொகுதி மாறி போட்டியிடும் எடியூரப்பா

Published On 2017-09-17 13:01 GMT   |   Update On 2017-09-17 13:01 GMT
கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. மாநில தலைவர் எடியூரப்பா தொகுதி மாறி போட்டியிட உள்ளார் என அவரது ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
பெங்களூர்:

கர்நாடகம் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக சித்தராமையா பதவி வகித்து வருகிறார். அடுத்த ஆண்டில் கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், அரசியல்
கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளை தொடங்கி விட்டன.

இந்நிலையில், கர்நாடகம் மாநில பா.ஜ.க. தலைவரும், முன்னாள் முதல் மந்திரியுமான எடியூரப்பா, வரும் சட்டசபை தேர்தலில் தொகுதி மாறி போட்டியிடப் போவதாக அவரது ஊடகத்துறை ஆலோசகர் ஆனந்த் விஜயேந்தர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், மத்திய கர்நாடகத்தின் ஷிமோகா மாவட்டத்தில் உள்ள ஷிகாரிபுரா தொகுதியில் தான் எடியூரப்பா இதுவரை போட்டியிட்டு வந்தார். ஆனால், வரும் சட்டசபை தேர்தலில் வடக்கு கர்நாடகத்தில் இருந்து தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா கர்நாடகாவுக்கு சுற்றுப்பயணம் செய்து சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஆலோசனை கூட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News