செய்திகள்

குஜராத்தில் உயரம் அதிகரிக்கப்பட்ட சர்தார் சரோவர் அணையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்

Published On 2017-09-16 22:14 GMT   |   Update On 2017-09-16 22:14 GMT
குஜராத் மாநிலத்தில் உயரம் அதிகரிக்கப்பட்ட சர்தார் சரோவர் அணையை பிரதமர் மோடி இன்று நடைபெறும் விழாவில் திறந்து வைக்கிறார்.
புதுடெல்லி:

குஜராத்தின் நவகம் பகுதியில் நர்மதை ஆற்றின் குறுக்கே சர்தார் சரோவர் அணை கட்டப்பட்டு உள்ளது. இந்த அணையின் உயரம் சமீபத்தில் 138.68 மீட்டராக அதிகரிக்கப்பட்டது. இதன் மூலம் குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் மராட்டிய மாநிலங்களை சேர்ந்த 4 கோடிக்கும் மேற்பட்ட மக்களின் குடிநீர் தேவை பூர்த்தியடைவதுடன், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பாசன வசதியும் பெற முடியும்.

உயரம் அதிகரிக்கப்பட்ட இந்த அணையை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். கேவடியா பகுதியில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து அவர் அருகில் உள்ள சாதுபெட் பகுதிக்கு செல்கிறார். அங்கு 182 அடி உயரத்தில் வல்லபாய் படேலுக்கு சிலை அமைக்கும் பணிகளை மோடி பார்வையிடுகிறார்.

பின்னர் அம்ரேலி பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள புதிய சந்தை திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் மோடி கலந்து கொள்வார் என பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News