செய்திகள்

கடை மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் தெலுங்கு கட்டாயம்: தெலுங்கானா முதல்வர்

Published On 2017-09-13 03:21 GMT   |   Update On 2017-09-13 03:24 GMT
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் தனியார் நிறுவனங்களின் பெயர்ப் பலகைகள் கட்டாயம் தெலுங்கு மொழியிலும் இடம்பெற வேண்டும் என அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார்.
ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கு மொழி வளர்ச்சிக்கான அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் அதிகாரிகளுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்தார்.

மாநிலம் முழுவதும் 1 முதல் 12 வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தெலுங்கு மொழியை கட்டாயம் கற்பிக்க வேண்டும் எனவும், அனைத்து கல்வி நிறுவனங்களும் இதை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், மாநிலத்தில் உள்ள அனைத்து கடைகள், தனியார் வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் தெலுங்கு கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை மீறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் பணியாற்றும் வங்கி அதிகாரிகள் ஒருமாத காலத்திற்குள் கட்டாயம் கன்னடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News