செய்திகள்

இந்தியாவில் முதல் முறையாக விளையாட்டு வீரர் கையில் விளையாட்டுத்துறை மந்திரி பதவி

Published On 2017-09-04 06:38 GMT   |   Update On 2017-09-04 06:38 GMT
ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ராஜ்யவர்த்தன் சிங் விளையாட்டுத்துறை மந்திரியாக பதவி ஏற்றதன் மூலம் இந்தியாவில் விளையாட்டு வீரர் ஒருவர் விளையாட்டுத்துறை மந்திரியாக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
புதுடெல்லி:

மத்திய மந்திரிசபை நேற்று மாற்றி அமைக்கப்பட்டபோது செய்தி ஒளிபரப்பு இணை மந்திரியாக இருந்த ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோருக்கு தனிப் பொறுப்புடன் கூடிய விளையாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு வீரர் ஒருவர் விளையாட்டுத்துறை மந்திரியாக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை.

ரத்தோர் மிகச்சிறந்த விளையாட்டு வீரர். 2004- ஏதென்சில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் தங்கப் பதக்கம் பெற்றவர்.

2008-ல் பெய்ஜிங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தேசிய கொடியை ஏந்தி செல்லும் வாய்ப்பை பெற்றார். சர்வதேச போட்டிகளில் ஏராளமான தங்கம், வெள்ளி பதக்கங்களை வாங்கி குவித்தவர்.



பா.ஜனதாவில் இணைந்து அரசியலில் ஈடுபட்டார். தற்போது விளையாட்டுத் துறை வழங்கப்பட்டு இருப்பதன் மூலம் விளையாட்டுத் துறையில் பெரும் எதிர் பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது.
Tags:    

Similar News