செய்திகள்

பெங்களூரு சிறையில் நாளை சசிகலாவுடன் தினகரன் சந்திப்பு

Published On 2017-09-03 07:32 GMT   |   Update On 2017-09-03 07:33 GMT
சிறையில் உள்ள சசிகலாவை அ.தி.மு.க. அம்மா அணி துணை பொதுச் செயலாளர் தினகரன் பலமுறை சந்தித்து பேசி இருக்கிறார் மீண்டும் அவர் நாளை சசிகலாவை சந்திக்க உள்ளார்.

பெங்களூரு:

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிறையில் உள்ள சசிகலாவை அ.தி.மு.க. அம்மா அணி துணை பொதுச் செயலாளர் தினகரன் பலமுறை சந்தித்து பேசி இருக்கிறார் மீண்டும் அவர் நாளை சசிகலாவை சந்திக்க உள்ளார்.

அவரை சந்திக்கும் போது தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து அவர் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சசிகலா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. சசிகலாவுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு உள்ளது.

அதாவது குமுளேட்டிவ் மனு தாகங்கல் செய்யலாம். அந்த மனுவை தாக்கல் செய்து சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை மீண்டும் நடத்தக் கோரியும் அந்த வழக்கு முடியும் வரை தன்னை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரியும் மனு தாக்கல் செய்யலாம்.

ஆனால் மறு சீராய்வு மனு போல அவசரப்பட்டு தாக்கல் செய்து இதுவும் தள்ளுபடியாகக் கூடாது என்பதில் சசிகலா உறுதியாக உள்ளார், இதனால் இந்த மனு குறித்து மூத்த வழக்கறிஞர்களை கலந்து ஆலோசித்து அதன்பிறகு இந்த மனு தாக்கல் செய்வது குறித்து முடிவு செய்ய வேண்டும் என்று சசிகலா ஏற்கனவே தன்னை சந்தித்த வக்கீல்களிடம் கூறு இருக்கிறார். இதே கருத்தை நாளை தினகரனிடமும் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் வருகிற 12-ந் தேதி அ.தி.மு.க. பொதுக்குழுவை கூட்ட உள்ளனர். இந்த கூட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்வது குறித்தும் சசிகலாவுடன் தினகரன் ஆலோசனை நடத்துவார் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது.

சசிகலா சிறையில் கொடுக்கும் உணவையே தற்போது உண்டு வருவதாக தெரியவந்துள்ளது இதே போல சிறையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்கிறார். மேலும் அவருக்கு என்ன வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது? எந்த வசதிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது? எந்த பத்திரிகைகள் அவருக்கு படிக்க கொடுக்கப்படுகிறது? என்பது குறித்து சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி சிறை சூப்பிரண்டுக்கு கடித் எழுதி இருந்தார்.

இதற்கு சிறை நிர்வாகம் பதில் அளித்து இருக்கிறது. சிறையில் அவருக்கு அளிக்கப்படும் வசதிகள் ரத்து செய்யப்படவில்லை என்று மட்டும் கூறி உள்ளது. ஆனால் என்னென்ன வசதிகள் அளிக்கப்படுகிறது என்பதை அந்த பதிலில் தெரிவிக்க வில்லை.

Tags:    

Similar News