செய்திகள்

மத்தியப்பிரதேசம்: சாகச செயல் புரிந்த போலீஸ்காரருக்கு ரூ.50,000 பரிசு வழங்கிய முதல்-மந்திரி

Published On 2017-08-28 22:04 GMT   |   Update On 2017-08-28 22:04 GMT
மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் பள்ளி மாணவர்களை காப்பாற்றி சாகச செயல் புரிந்த போலீஸ்காரருக்கு முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் ரூ.50,000 பரிசு வழங்கி கவுரவித்துள்ளார்.
போபால்:

மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் பள்ளி மாணவர்களை காப்பாற்றி சாகச செயல் புரிந்த போலீஸ்காரருக்கு முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் ரூ.50,000 பரிசு வழங்கி கவுரவித்துள்ளார்.

மத்தியப்பிரதேசம் மாநிலம் சாகர் மாவட்டத்தின் சிதோரா கிராமத்தில் உள்ள பள்ளியில் 400-க்கு மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.  பள்ளியில் இருந்து உள்ளூர் போலீசாருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில், பள்ளி மைதானத்தில் வெடிகுண்டு கிடப்பதாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.



அப்போது காவல் நிலையத்தில் இருந்த தலைமை காவலர் அபிஷேக் படேல் விரைந்து சென்று, பள்ளி மைதானத்தில் கிடந்த 10 கிலோ எடை கொண்ட வெடிகுண்டை கைப்பற்றினார். மாணவர்களின் உயிரை காப்பாற்றுவதற்காக, வெடிகுண்டை தோளில் தூக்கி வைத்தபடி அங்கிருந்து ஓடினார். அதன்பின் அதனை செயலிழக்க செய்தார்.

இதுதொடர்பான வீடியோ உள்ளூர் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியதை தொடர்ந்து, அபிஷேக் படேலுக்கு அப்பகுதி மக்களும், போலீஸ் அதிகாரிகளும் பாராட்டு தெரிவித்தனர்.

சாகச செயல் புரிந்த அபிஷேக் படேலை கவுரவிக்கும் வகையில், அரசு சார்பில் ரூ.50,000 பரிசு வழங்கப்படும் என முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் நேற்று அறிவித்தார்.



இந்நிலையில், மாணவர்களின் உயிரை துணிச்சலுடன் காப்பாற்றிய தலைமை போலீஸ் காவலர் அபிஷேக் படேலை  கவுரவிக்கும் வகையில், மாநில முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் ரூ.50,000 பரிசு வழங்கி கவுரவித்துள்ளார். அப்போது அவரது குடும்பத்தினரும் உடனிருந்ததனர்.

இதுதொடர்பாக அபிஷேக் படேல் கூறுகையில், நான் எனது ஒரு உயிரை பற்றி கவலைப்படவில்லை. அங்கிருந்த 400 மாணவர்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பதால் வெடிகுண்டை தூக்கிக் கொண்டு ஓடினேன் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News