செய்திகள்

வெள்ளத்தில் மூழ்கியுள்ள பள்ளிகள் - படகில் பாடம் பயிலும் மாணவர்கள்

Published On 2017-08-24 10:02 GMT   |   Update On 2017-08-24 10:03 GMT
அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தால் 23,000 பள்ளிகள் மூழ்கியுள்ளதால் படகின் மூலம் மாணவர்கள் பாடம் பயில்வது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
திஸ்பூர்:

அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தால் கிட்டத்தட்ட 23,000 பள்ளிகள் மூழ்கியுள்ளன. இதனால் மாணவர்களின் கல்வி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு ஜாய் என்ற தொண்டு நிறுவனம், பார்பேடா மாவட்டத்தில் மிதக்கும் படகுகள் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தி வருகிறது.

அந்நிறுவனத்தின் ஊழியரான ஜாகிதுல் இஸ்லாம் இது குறித்து கூறுகையில், படகில் வகுப்பு எடுக்கும் முறையை 6 மாதத்திற்கு முன்பே தொடங்கி விட்டோம். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்கும் என தெரிவித்தார்.

மேலும், பல கிராமங்களில் உள்ள மாணவர்கள் வீடுகளிலிருந்து படகின் மூலம் அழைத்து வரப்பட்டு படகிலேயே பாடம் நடத்தப்படுகிறது. இவ்வகுப்பு 2 மணி நேரம் நடத்தப்படுகிறது.

இந்த வகுப்புகள் மூலம் மாணவர்கள் தங்கள் படிப்பை தடையின்றி தொடருவதாக அந்த தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News