செய்திகள்

டெல்லி விமான நிலையத்தில் ட்ரோன்கள் பறந்ததா? - இருமுறை ஓடுபாதைகள் மூடப்பட்டதால் பரபரப்பு

Published On 2017-08-20 20:04 GMT   |   Update On 2017-08-20 20:04 GMT
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ட்ரோன்கள் பறந்ததாக விமானிகள் தகவல் அளித்ததால் இரண்டு முறை ஓடுபாதைகள் மூடப்பட்டது.
புதுடெல்லி:

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ட்ரோன்கள் பறந்ததாக விமானிகள் தகவல் அளித்ததால் இரண்டு முறை ஓடுபாதைகள் மூடப்பட்டது.

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் நாட்டிலேயே பரபரப்பாக இயங்கக்கூடிய முக்கியமான விமான நிலையமாகும். இந்நிலையில், நேற்று அங்கு சீன ஏர் லைன்ஸ் விமானம் ஒன்று தரையிறங்கும் போது ட்ரோன் போன்ற பறக்கும் பொருளை விமானி பார்த்துள்ளார். உடனே, கட்டுப்பாட்டு அறைக்கு அவர் தகவல் அளித்ததை தொடர்ந்து சிறிது நேரம் விமான நிலைய ஓடுபாதைகள் மூடப்பட்டன.

விமான நிலைய அதிகாரிகள் அங்கு தீவிர சோதனை நடத்தியதில் எதுவும் சிக்கவில்லை. இதனையடுத்து, மீண்டும் சற்று நேரத்திற்கு பின்னர் ஏர் ஏசியா விமானம் தரையிறங்கும் போது அதேபோல ட்ரோன் ஒன்றை விமானி பார்த்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.

இரண்டாவது முறையாக பாதுகாப்பு அதிகாரிகள் ஓடுபாதைகளை மூடி சோதனை நடத்தினர். இம்முறையும் எதுவும் பிடிபடவில்லை. இதனையடுத்து, ட்ரோன்கள் பறந்த விவகாரம் தொடர்பாக டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரண்டு முறை ஓடுபாதைகள் மூடப்பட்டதால் பல்வேறு விமானங்கள் தாமதமாக தரையிறங்கின. மேலும், சில விமானங்கள் அருகிலுள்ள லக்னோ, நொய்டா விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டன.
Tags:    

Similar News