செய்திகள்

பஞ்சாப்பில் காங்கிரஸ் தொண்டர்கள் 2 பேர் சுட்டுக்கொலை

Published On 2017-08-20 06:02 GMT   |   Update On 2017-08-20 06:02 GMT
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் தொண்டர் ஜமன்தீப் சிங்குக்கு, அகாலிதள இளைஞர் அணி தலைவர் ‌ஷஷூ கமோஜ் இடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் கொல்லப்பட்டனர்.
பெரோஸ்பூர்:

பஞ்சாப் மாநிலத்தில் அம்ரீந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அகாலிதளம் அங்கு எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது.

அங்குள்ள பாசில்கா அபோகர் நகரில் இளைஞர் காங்கிரஸ் தொண்டர் ஜமன்தீப் சிங்குக்கு, அகாலிதள இளைஞர் அணி தலைவர் ‌ஷஷூ கமோஜ் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

இது இரு கட்சி தொண்டர்களிடையே மோதலை ஏற்படுத்தியது. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இந்த மோதலின் ‌ஷஷூ சுமோஜ் துப்பாக்கியால் காங்கிரஸ் தொண்டர்களை சரமாரியாக சுட்டார்.

இதில் இளைஞர் காங்கிரசை சேர்ந்த குர்மித் சிங் (28), சுரேந்தர் சிங் (29) ஆகியோர் குண்டு பாய்ந்து பலியானார்கள். இந்த மோதலில் அகாலிதள தொண்டர்கள் 3 பேர் காயம் அடைந்தனர்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி அகாலிதளம், காங்கிரசை சேர்ந்த பலர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
Tags:    

Similar News