search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காங்கிரஸ் தொண்டர்கள்"

    • பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் நாட்டின் கருத்துக்கு எதிராக உள்ளன.
    • நீங்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தங்களுக்கு எதிராக தெருக்களிலும், கிராமங்களிலும் எல்லா இடங்களிலும் போராடி வருகிறீர்கள்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு நாளை நடக்கிறது. 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

    இதையொட்டி காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தொண்டர்களை வாழ்த்தி வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில் அவர் பேசியதாவது:-

    காங்கிரசின் முதுகெலும்பு கட்சியின் தொண்டர்களாகிய நீங்கள்தான். பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் நாட்டின் கருத்துக்கு எதிராக உள்ளன. அவர்கள் அரசியலமைப்பு, ஜனநாயக கட்டமைப்பு தேர்தல் ஆணையம் உள்ளிட்ட நிறுவனங்கள் மற்றும் இந்தியாவின் சட்ட கட்டமைப்பை தாக்குகிறார்கள்.

    நீங்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தங்களுக்கு எதிராக தெருக்களிலும், கிராமங்களிலும் எல்லா இடங்களிலும் போராடி வருகிறீர்கள். நீங்கள்தான் பாதுகாவலர்கள்.

    தேர்தல் வாக்குறுதி அறிக்கையில் மக்கள் பிரச்சனைகளை கொண்டு வர எங்களுக்கு உதவியுள்ளீர்கள். நாங்கள் உங்களை நம்புகிறோம். நாங்கள் உங்களை நேசிக்கிறோம். உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

    பா.ஜனதாவையும், அவர்களின் சித்தாந்தங்களையும் தோற்கடிக்க போகிறோம்.

    இவ்வாறு ராகுல் காந்தி அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.


    ×