செய்திகள்

காஷ்மீரில் தேடுதல் வேட்டை: பாதுகாப்பு படையினர் அதிரடி

Published On 2017-08-19 05:36 GMT   |   Update On 2017-08-19 05:36 GMT
காஷ்மீரின் தெற்கு பகுதியில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் இன்று காலை முதல் ஈடுபட்டு வருகின்றனர்.
ஸ்ரீநகர்:

காஷ்மீரின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள சோபியான் உள்ளிட்ட சில மாவட்டங்களில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து, பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சகோரா, மாண்ட்ரிபர்க், சைபோரா, பிரதாப்போரா, டகிபோரா, ரானிபோரா, ரட்னிபோரா, டாங்கம் மற்றும் வாங்கம் உள்ளிட்ட மாவட்டங்களில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

இதில், சி.ஆர்.பி.எப். வீரர்கள், ராஷ்டிரீய ரைபிள், சிறப்பு அதிரடி படை மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநில போலீசாரும் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தினர். இதையடுத்து, எல்லையில் உள்ள அனைத்து வழிகளும் மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News