செய்திகள்

நீட் தேர்வில் இருந்து ஓராண்டுக்கு விலக்கு கோரும் அவசர சட்ட வரைவு: மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல்

Published On 2017-08-16 15:43 GMT   |   Update On 2017-08-16 15:43 GMT
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு ஓராண்டுக்கு விலக்கு கோரும் அவசர சட்டம் தொடர்பாக, தமிழக அரசு தாக்கல் செய்திருந்த சட்ட வரைவுக்கு மத்திய சட்ட அமைச்சகம் இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
புதுடெல்லி:

அகில இந்திய அளவில் மருத்துவ படிப்புக்கான பொது நுழைவு தேர்வில் (நீட்) தமிழக மாணவர்களுக்கு ஓராண்டு விலக்கு அளிக்க கோரி அவசர சட்ட முன்வடிவை தமிழக அரசு தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது.

இதற்கிடையே, இந்த சட்ட முன்வடிவு தொடர்பாக அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலிடம் மத்திய அரசு கருத்து கேட்டிருந்தது. அவரும் ஓராண்டுக்கு நீட்டிக்கலாம் என தமிழக அரசுக்கு சாதகமாகவே கருத்து தெரிவித்திருந்தார்.



இந்நிலையில், இன்று இரவு தமிழக அரசு தாக்கல் செய்திருந்த சட்ட வரைவுக்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதைதொடர்ந்து மனிதவள மேம்பாட்டு துறை மற்றும் சுகாதார துறை அமைச்சகங்கள் ஒப்புதல் அளித்துள்ளன. மத்திய அரசின் இந்த முடிவு, தமிழக அரசுக்கு சாதகமாகவே அமைந்துள்ளது.
 
இந்த மசோதாவிற்கு உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்த உடன் ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு ஓராண்டு விலக்கு அளிக்கும் அவசர சட்டம் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News