செய்திகள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய-சீன ராணுவத்தினர் இனிப்பு பரிமாறிக்கொண்டனர்

Published On 2017-08-15 23:13 GMT   |   Update On 2017-08-15 23:13 GMT
இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய-சீன ராணுவ வீரர்கள் இனிப்பு பரிமாறிக்கொண்டனர்.
காங்டாக்:

ஆண்டுதோறும் இந்திய சுதந்திர தினத்தன்று, இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் சந்திப்பு நடைபெறுவது வழக்கம். ஆனால், டோக்லாம் பகுதியில், இந்திய-சீன ராணுவத்தினர் 2 மாதங்களாக போர் முஸ்தீபுகளில் ஈடுபட்டு வருவதால், நேற்று அத்தகைய சந்திப்பு நடைபெறவில்லை.

அதற்கு பதிலாக, இருநாட்டு ராணுவ வீரர்களும் இனிப்பு பரிமாறிக்கொண்டனர். டோக்லாம் பகுதியில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள நாதுலா எல்லையில் இந்நிகழ்வு நடைபெற்றது. இதுபோல், உள்ளூர் மக்களுக்கும் இந்திய வீரர்கள் இனிப்பு வழங்கினர். 
Tags:    

Similar News