செய்திகள்

கோரக்பூர் மருத்துவமனையில் 60 குழந்தைகள் பலி: சோனியா காந்தி, ராகுல் அதிர்ச்சி

Published On 2017-08-12 01:14 GMT   |   Update On 2017-08-12 03:27 GMT
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மருத்துவமனையில் 5 நாட்களில் 60 குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவத்துக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி அதிர்ச்சி தெரிவித்தனர்.
லக்னோ:

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மூளை வீக்கம் ஏற்பட்டு 5 நாட்களில் 60 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

இந்த சம்பவத்துக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

சோனியா கூறுகையில், “இந்த சோகமயமான சம்பவம் குறித்து தான் அடைந்த வலியை சொல்ல வார்த்தைகள் இல்லை. உயிரிழந்த அப்பாவி குழந்தைகளின் குடும்பங்களுக்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது உத்தரபிரதேச மாநில அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான குலாம் நபி ஆசாத், பிரமோத் திவாரி, சஞ்சய் சிங் உள்ளிட்டோர் இன்று காலை மருத்துவமனையை பார்வையிடுகின்றனர்.

குழந்தைகளின் இறப்புக்கு மாநில அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என்று முன்னாள் முதல்வரும் சமாஜ்வாடி தலைவருமான அகிலேஷ் யாதவ் வலியுறுத்தி உள்ளார். உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

சம்பவம் தொடர்பாக மாவட்ட அதிகாரிகளிடம் முதல்வர் யோகி தொடர்ந்து கேட்டு கொண்டு வருகிறார். இருப்பினும் யோகி அரசுக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது.
Tags:    

Similar News