செய்திகள்

ராகுல் காரில் கல்வீசிய மேலும் 3 பேரை பிடிக்க வேட்டை

Published On 2017-08-07 08:08 GMT   |   Update On 2017-08-07 08:08 GMT
ராகுல் காந்தி காரில் கல்வீசி தாக்குதல் நடத்தியது தொடர்பாக மேலும் 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
அகமதாபாத்:

குஜராத்தில் ஏற்பட்ட வெள்ள சேத பகுதிகளை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி கடந்த வெள்ளிக்கிழமை பார்வையிட்டார். பன்சகந்தா மாவட்டத்தில் அவர் சென்று கொண்டிருந்தபோது அவரது கார் மீது கல்வீசி தாக்கினார்கள்.

இதில் ராகுல்காந்தி காயமின்றி தப்பினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடந்து வருகிறது.

இந்த தாக்குதல் தொடர்பாக போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பொதுப்பணியில் இருப்பவர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல், அடுத்தவர்களுக்கு உயிர் ஆபத்து ஏற்படுத்தும் வகையில் காயம் ஏற்படுத்த முயற்சித்தல், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

போலீசார் விசாரணையில் உள்ளூர் பாரதீய ஜனதா இளைஞர் பிரிவை சேர்ந்த நிர்வாகி ஜெயேஸ் தர்ஜித் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடந்திய விசாரணையில் மேலும் 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் பெயர் பகவான்தாஸ் படேல், மோர்சிங் ராவ், முகேஷ் தாக்கர் என்று தெரியவந்துள்ளது.

அவர்கள் தலைமறைவாகிவிட்டனர். 3 பேரையும் பிடிக்க போலீசார் தேடிவருகிறார்கள். இவர்கள் பாரதீய ஜனதாவை சேர்ந்தவர்கள் ஆவர்.
Tags:    

Similar News