செய்திகள்

ரூ. 262 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட பாராளுமன்ற வளாகம்- பிரதமர் மோடி திறந்து வைத்தார்

Published On 2017-07-31 11:10 GMT   |   Update On 2017-07-31 11:10 GMT
டெல்லியில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் 261.85 கோடி ரூபாய் செலவில் புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.
புதுடெல்லி:

டெல்லியில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் 1975-ம் ஆண்டு கட்டப்பட்ட விரிவாக்கப் பகுதியில் மக்களவை மற்றும் மாநிலங்களவை அலுவலகங்கள் மற்றும் மத்திய அரசின் நிலைக்குழு அதிகாரிகளுக்கான அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. நாளுக்குநாள் பல்வேறு புதிய நிலைக்குழுக்கள் உருவாக்கப்படுவதால் அவற்றில் உள்ள அதிகாரிகளுக்கான அலுவலகங்களுக்கு போதிய இடவசதி இல்லாத நிலை நீடித்தது.

இந்த நெருக்கடியை போக்க புதிதாக ஒரு விரிவாக்கப் பகுதி கட்டிடத்தை கட்ட தீர்மானிக்கப்பட்டு, கடந்த 2009-ம் ஆண்டில் இந்தப் பணிக்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. 2100 சதுர மீட்டர் பரப்பளவில் 261.85 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட இந்த புதிய விரிவாக்கப் பகுதி கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

மிகவும் எளிமையாக நடைபெற்ற இந்த திறப்பு விழாவில் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், துணை சபாநாயகர் தம்பித்துரை, மத்திய மந்திரிகள் அனந்த் குமார், நரேந்திர சிங் டொமர் மற்றும் மத்திய அரசின் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News