search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாராளுமன்ற வளாகம்"

    மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்ற வளாகத்தில் இன்று அதிமுக எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #WinterSession #ADMKMPsProtest
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் ரபேல் ஒப்பந்த விவகாரம் மற்றும் மாநிலம் சார்ந்த பிரச்சினைகனை எழுப்பி எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்பிக்கள் பாராளுமன்ற மக்களவையில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

    அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் எச்சரிக்கை விடுத்தார். அதன்பின்னரும் அமளி நீடித்ததால், அதிமுக உறுப்பினர்கள் 24 பேர் 5 நாட்களுக்கு கூட்டத் தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.



    இந்நிலையில் அதிமுக உறுப்பினர்கள் இன்று பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேகதாது அணை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பினர். இதேபோல் ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி தெலுங்கு தேசம் கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடியது. அப்போது மக்களவையில் கேள்வி நேரம் தொடங்கியதும், எம்பிக்கள் அமளியில் ஈடுபட ஆரம்பித்தனர். இதனால் அவையை 12 வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார். #WinterSession #ADMKMPsProtest
    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளை முன்னிட்டு, டிசம்பர் 24 அன்று பாராளுமன்ற வளாகத்தில் சிறப்பு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. #Parliament #AtalSammanSammelan #Vajpayee
    புதுடெல்லி:

    மத்தியில் காங்கிரஸ் அல்லாத கட்சியின் ஆட்சியின் பிரதமராக ஐந்தாண்டுகள் நீடித்த முதல் தலைவர் என்ற பெருமைக்குரியவர் அடல் பிஹாரி வாஜ்பாய். 25-12-1924 அன்று பிறந்த இவர் 1942-ம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் இணைந்து போராடி பொது வாழ்வில் நுழைந்தார்.

    லக்னோ தொகுதி எம்.பி.யாக 1991, 1996, 1998, 1999 மற்றும் 2004 ஆண்டுகளில் தொடர்ந்து ஐந்துமுறை இவர் வெற்றி பெற்றுள்ளார். பிரதமராவதற்கு முன்னர் வெளியுறவுத்துறை மந்திரியாக பதவிவகித்த வாஜ்பாய், உடல்நலக் குறைவால் அரசியலில் இருந்து விலகினார். இவர் கடந்த ஆகஸ்டு 16ம் தேதி மறைந்தார்.



    இந்நிலையில், பாராளுமன்ற வளாகத்தில் வரும் 24ம் தேதி வாஜ்பாய் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அன்று பல்வேறு துறைகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 25 பேருக்கு வாஜ்பாய் நினைவு விருதளிக்க உள்ளோம்.

    வாஜ்பாய் பற்றிய செய்திப்படம் திரையிடப்படும். இதில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, பல்வேறு மாநில கவர்னர்கள், முதல் மந்திரிகள், மத்திய மந்திரிகள் மற்றும் மாணவர்கள் பலர் வாஜ்பாய் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்கின்றனர் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். #Parliament #AtalSammanSammelan #Vajpayee
    அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி பாராளுமன்றத்தில் உள்ள அவருடைய சிலைக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை (வியாழக்கிழமை) மலர் தூவி மரியாதை செய்கிறார். #Ambedkar #NarendraModi #VenkaiahNaidu #Tribute
    புதுடெல்லி:

    இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரின் நினைவு தினம் டிசம்பர் 6-ந் தேதி நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நாளை (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மலர் தூவி மரியாதை செய்கிறார்.

    இந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி ஆகியோரும் கலந்து கொண்டு நினைவஞ்சலி செலுத்துகின்றனர். மத்திய மந்திரிகள் தாவர் சந்த் கெலாட், ராம்தாஸ் அதவாலே, கிரிஷன் பால் குர்ஜார், விஜய் சாம்ப்லா மற்றும் பல்வேறு முக்கிய தலைவர்களும் இதில் பங்கேற்கிறார்கள்.



    தலைவர்கள் மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பகல் 11 மணி வரை நடைபெறுகிறது. இதையொட்டி அம்பேத்கர் சிலையின் பீடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்படுகிறது.

    நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அம்பேத்கர் பவுண்டேசன் ஏற்பாடு செய்து உள்ளது.

    நிகழ்ச்சியில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரத மர் மற்றும் மத்திய மந்திரிகள் கலந்துகொள்வதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.

    நாடாளுமன்ற வளாகத்திலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் ஏராளமான போலீசாரும், கமாண்டோ படையினரும் குவிக்கப்படுகின்றனர். பொதுமக்கள் நுழைவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளன.  #Ambedkar #NarendraModi #VenkaiahNaidu #Tribute 
    ×